பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என நடிகை விந்தியா பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த வழிகாட்டுதல் குழுவானது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இந்நிலையில் வழிகாட்டுதல் குழுவில் இஸ்லாமியர்கள்,குழுவின் மூத்த தலைவர்கள்,முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை என்ற மன வருத்தம் அதிமுகவினரிடையே நிலவுகின்றது.
இதுகுறித்து அக்டோபர்-7 ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை விந்தியாவிடம் கேட்கப்பட்டன.இதற்கு பதிலளித்த நடிகை விந்தியா 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அனுபவம் மிக்கவர்கள் இடம் பெற்றுள்ளனரெனவும் எதிர்காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.மேலும் எங்களுக்கு எவ்வித அவமானமும் நிகழவில்லை என்றும் பெண்களுக்கு உரிய மரியாதை அதிமுகவில் அளிக்கப்படுகின்றது என்றும் பெண்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.