மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18 என்பது நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு 18ம் ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை விவாதப் பொருளாக மாற்ற விரும்புகிறேன், மத்திய அரசும் மாநில அரசுகளும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது இளம் பெண்களின் பாதுகாப்புக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.