Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பெண்களுடன் உல்லாசமாக இருக்க வீட்டில் தனி ரூம்… “பெண்களை ஏமாற்றி சீரழித்த துணை நடிகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்”…!!!

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த துணை நடிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மில்லேட்ஸ் ரோட்டை சேர்ந்தவர் துணை நடிகரான முகமது ஷயாத். இவர் மீது மூன்று பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவாவை சந்தித்து அண்மையில் புகார் அளித்துள்ளனர். இவரின் மீது அவர்கள் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர். அந்த மூன்று பெண்களும் புகாரில் அவர் தங்களை காதலித்து திருமணம் ஆசைகாட்டி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விட்டதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் கூறி இருந்தார்கள்.

இதனால் கமிஷனர் அந்த மூன்று பெண்களின் புகார் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மனுக்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தியதில் பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்த முகமது ஷயாத் பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்தது.

இவர் மாடலிங் என்ற பெயரில் சினிமாவில் சான்ஸ் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றிவதும் மற்றும் துணை நடிகைகள் என 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றுவதும் அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோக்களை காட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில் உண்மைகளையெல்லாம் ஒப்புக்கொண்டார். மேலும் இவர் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காக வீட்டில் தனியாக ரூம் தயார் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் இவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |