கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பணம் கொடுத்தால் அழகான பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என ஒரு விளம்பரம் வந்ததை பார்த்து அந்த கல்லூரி மாணவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசிய நபர் முதலில் 2500 ரூபாய் செலுத்தினால் பெண்களின் புகைப்படத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். பின்னர் நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஆன்லைன் மூலம் மாணவர் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் 2500 ரூபாய் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து நீங்கள் செலுத்தி அட்வான்ஸ் தொகையை திரும்ப தந்து விடுவோம் நீங்கள் விரும்பிய பெண்ணுடன் தனிமையில் இருக்க கூடுதல் பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய கல்லூரி மாணவர் பல்வேறு தவணைகளாக 7 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வரை அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கல்லூரி மாணவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.