Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இது உங்களுக்காக… இனிமே இத ஃபாலோ பண்ணுங்க…!!!

பெண்களுக்காக சில சமையலறை டிப்ஸ் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உணவு சமைக்கும் சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சமையலுக்கு தேவையான பொருள்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். அது பெண்களின் கடமை. சில கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காய்கறி நறுக்கும் பலகை அழுக்காகி விட்டால், கொஞ்சம் சோடா மாவு மற்றும் வினிகர் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.புது பாத்திரங்களின் ஸ்டிக்கர் எடுக்க பாத்திரத்தில் உட்பகுதியை கொஞ்சம் நேரம் அடுப்பில் காட்டி பிறகு கத்தி வைத்து சுலபமாக எடுக்கலாம்.சமையல் மேடையில் எண்ணெய் பிசுக்கை போக்க கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து தேய்த்துக் கழுவினால் பிசுக்கு போகும்.

இட்லி மற்றும் தோசைக்கு மாவு அரைக்கும் போது அரிசியை 3 மணி நேரத்துக்கு மேல் ஊற வைக்க வேண்டாம். உளுந்து ஒரு மணி நேரம் ஊற விட்டு அரைக்கவும். சுடும் போது மட்டும் உப்பு சேர்த்தால் போதும். பச்சை மிளகாய்களை ஈரம் இல்லாமல் துடைத்து, ஒரு டப்பாவில் போட்டு, மேலே மஞ்சள் தூளை தூவி காற்று புகாமல் மூடி வையுங்கள். ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பல நாட்கள் கெடாமல் இருக்கும். தக்காளியை அடி பக்கமாக திருப்பி ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டாமல் வைத்தால் பழம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Categories

Tech |