Categories
மாநில செய்திகள்

பெண்களே இனி கவலை இல்லாமல் போகலாம்…. உங்களுக்காக தோழி இருக்காங்க…. புதிய சேவை அறிமுகம்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பாதயாத்திரை வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தோழி எனும் இரு சக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. 15 இருசக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கு 30 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை வரும் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்ட குற்றங்கள் நிகழாத வகையில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கூட்டத்தில் குழந்தைகளை கடத்துபவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் புகார்களை தெரிவித்தால் உடனடியாக குற்றம் நடக்கும் இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் காவலர்கள் விரைந்து சென்று நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

Categories

Tech |