Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2000 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.

சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜா நகர் உள்ளிட்ட கிராமங்களில் முப்பத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்படுகிறது .இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

வழக்கமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு 11 டன் வரை மல்லிகை பூக்கள் விவசாயிகள் கொண்டு வரும் நிலையில், தற்போது ஒரு டன்னுக்கும் குறைவான பூக்கள் விற்பனைக்கு வருகின்றது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ 1, 600 ரூபாய் முதல் ரூ. 2,117 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |