மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் கருதி இலவச சிலிண்டர் இணைப்பு வசதி ஏற்படுத்தி தருவதற்காக இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத்திட்டத்தில் நீங்கள் இலவச சிலிண்டர் இணைப்பு எப்படி பெறுவது என்பது பற்றி இதில் விரிவாக பார்க்கலாம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக விண்ணப்பிக்கும் பெண் 18 வயதை மூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.இந்தத் திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு முதல் சிலிண்டர் இலவச மற்றும் கேஸ் அடுப்பு ஆகியவை பயனாளிகளுக்கு கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்
* e-KYC
* ரேஷன் கார்டு
* ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை
* வங்கி கணக்கு எண்
* பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
எப்படி விண்ணப்பிப்பது?
* https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு செல்லவும்
* அதில் Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்யவும்.
* எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்