Categories
தேசிய செய்திகள்

பெண்களே… உங்களுக்கான அறிய வாய்ப்பு… “10,000 பேருக்கு வேலை”… பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமானது அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அந்த வகையில் பெண்களாலான ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பு ஒன்றை இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலாவின் ஃபியூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டரில்:” தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிற்பார் திட்டத்திற்கு பெண்கள் தேவை, அதுமட்டுமில்லாமல் ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த நிறுவனம் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பல பெண்கள் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |