Categories
அரசியல்

பெண்களே… உங்களை தரக்குறைவாக நடத்தினாலோ, முறைத்தாலோ… அவர்களை அடிங்க… துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு..!!

திமுக துரைமுருகன் பெண்களை பேருந்து நடத்துநர்கள் முறைத்தால் அவர்களை அடியுங்கள் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரிய முத்துமோட்டூரில் பொதுக் கூட்டமானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்துத் தலைவர்களிடம்  ஒப்படைக்கப்படும். அவர்கள் தான் அதை நிறைவேற்றுவார்கள். எனவே இதை கருத்தில் வைத்து வாக்களியுங்கள்.

மேலும் மகளிருக்கு அரசு பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என அறிவித்ததை அடுத்து இதனை மகளிரும் சந்தோசமாக வரவேற்றனர். இந்நிலையில் சில ஓட்டுனர்கள் பேருந்தை தங்களது சொத்து போல பெண்களை நடத்துவதாக புகார் கொடுத்துள்ளனர். இதனால் பேருந்தில் பெண்களை தரக்குறைவாக நடத்தினாலும், முறைத்தாலும்  அவர்களை அடியுங்கள். மேலும்  இவ்வாறு தவறான செயலில் ஈடுபடும் நடத்துனர்களை வேலையை விட்டு நிறுத்தி அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |