பெண்கள் முக அழகை பாதுகாப்பதற்கு சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் அழகை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது.
ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைகட்டிய கருப்புக் கொண்டைக் கடலையை தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும். தேங்காய் பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி கருமையாகும். துளசி இலைச் சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும். பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.