தமிழகத்தில் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து நிர்வாணமாக கிராபிக்ஸ் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடும் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து, அவர்களின் உடலை நிர்வாணமாகக் கிராபிக்ஸ் மூலம் மாற்றும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பணம் பிடுங்கும் வேலையையும் சில கும்பல் செய்து வருவதால் எச்சரித்துள்ளனர். அதனால் பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தான். இனிமேல் அதை தவிர்க்க வேண்டும்.