Categories
மாநில செய்திகள்

பெண்களே உஷார்…. இனிமே இந்த தவறை செய்யாதீங்க…. சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள்…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டுமென கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டினால் உடனே புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |