நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருவதால் பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்களால் நாளுக்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 50 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி, பெண் நேரத்தை கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும், தனியாக வெளியே செல்லக் கூடாது, குடும்ப உறுப்பினர் உடன் இரவில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.