Categories
மாநில செய்திகள்

பெண்களே உஷார்…. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் மோசடி…. 2 பேர் கைது….!!!!

மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக பல இளம்பெண்களை ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிவகங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக மதுரையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் மீது புகார் கொடுத்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் முகம் தெரியாத அவர்களை நம்பி இளம்பெண்கள் ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |