பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வராமல் தடுப்பதற்கும், அவ்வாறு வந்தால் அதற்கான தீர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு கருப்பை. இது தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. எனவே அதனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு பல கருப்பை பிரச்சனைகளை குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.
ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து காபியாக தயாரித்து ஒரு வாரத்தில் ஓரிரு நாட்களில் பருகலாம். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் ஆளி விதைகள் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். பாலில் மஞ்சள் கலந்து தினமும் இருவேளை பருகுவதும் மிகவும் நல்லது.
கருப்பை நோய்கள் வராமல் தடுக்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அது உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவும். நார்ச்சத்து உணவுகளான பீன்ஸ், பயிறு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், முழு தானியங்கள் ஆகியவை சாப்பிடலாம். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பிரச்சனைகள் எதுவும் நம்மை அண்டாது.