தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையை மாற்றும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றது.தமிழக அரசு பல தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.அவ்வகையில் தமிழகம் முழுவதும் அதிகளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனத்திற்கு 12-ம் வகுப்பு கல்வித் தகுதியுடைய 18 வயது முதல் 20 வயது பெண்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் வேலூரில் உள்ள ஈவேரா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி அளவில் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.