சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜா நகர் உள்ளிட்ட கிராமங்களில் முப்பத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்படுகிறதுஇ. ங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சில நாட்களாகவே பூ விலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ஆயிரத்துக்கு விற்ற மல்லிகை பூவின் விலை ரூ.2000 க்கு விற்கப்படுகிறது. ஜாதிப்பூ ரூ.1,400 க்கும், முல்லைப்பூ ரூ.1,400 க்கும், அரளிப்பூ 400-க்கும், ரோஜாப்பூ 200க்கும் விற்கப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் மல்லிகைப்பூ ரூபாய் 2000 க்கு விற்கப்படுகின்றது.