பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளைக் குறைக்க இந்த டீயை குடித்து வந்தால் போதும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலத்தில் பொதுவாக அடிவயிற்று வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மாதவிடாய் காலங்களில் அவர்களால் தங்கள் அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய முடியாது. இதனை குறைக்க வலி நிவாரணிகளை அடிக்கடி எடுப்பது முற்றிலும் தவறு. மாதவிடாய் வலியை குறைக்க ஒரு சில தேநீர் வகைகள் நமக்கு கை கொடுக்கும். ஒவ்வொரு தேநீரிலும் நாம் சேர்க்கும் பொருட்கள் மாதவிடாய் தசை இறுக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. அவ்வகையில் எந்தெந்த தேநீர் பருகி மாதவிடாய் வலியை விரட்டலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
இஞ்சி டீ:
இந்திய சமையல் அறையில் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று இஞ்சி. ஒரு அங்குல இஞ்சியைத் தோல் சீவி கொதிக்கின்ற தண்ணீர் அல்லது பாலில் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தேயிலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது மாதவிடாய் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அப்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவியாக இருக்கும்.
பெருஞ்சீரக டீ:
ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் கால் டீஸ்பூன் தேயிலையை கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால் பால் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்களின் மாதவிடாய் பிடிப்புகளை குறைக்க உதவும். பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது வயிற்று வீக்கம் மற்றும் வயிற்று பிடிப்புகளுக்கு உதவும்.
கிரீன் டீ:
கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து கொதிக்க விடவும். 5 முதல் 10 நிமிடங்கள் அதனை கொதிக்க விட வேண்டும். கசப்பு சுவை இருந்தால் அதில் லெமன் மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம். இது வயிற்று வீக்கம் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்க உதவுகிறது.