பெண்கள் சுய தொழில் தொடங்கவும்,தொழிலை மேம்படுத்தவும் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் 3 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கிராமப்புற பிராந்திய வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு பகுதி கவுன்சிலரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த வருமான வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. பேக்கரி, கண்ணாடி தயாரிப்பு, கேண்டீன், கேட்டரிங், பியூட்டி பார்லர், காபி பவுடர் தயாரிப்பு உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம். வட்டியே இல்லாமல் கூட இத்திட்டத்தில் கடன் கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் அரசிடமிருந்து 30 சதவீத மானிய உதவியும் கிடைக்கிறது.