தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது வரம்பு 18 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள வரும்போது தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0424-275860 மற்றும் erodejobfair@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.