தமிழக முன்னாள் பாஜக பொதுச்செயலராக இருந்த கே.டி ராகவனின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராகவனுடைய விவகாரம் தனிப்பட்ட விஷயம் என்று கூறிய சீமான் அதற்கு ஆதரவளித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உலகத்தில் எங்கும் நடக்காததையா அவர் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதியில்லாமல் படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவது தான் சமூக குற்றம்.
ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்ப்பது தவறு. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவர் அவரது அறையில் இருப்பது எப்படி குற்றமாகும்? கேடுகெட்ட சமூகமாக நாம் மாறி விட்டோம் என்றுதான் பயப்பட வேண்டியுள்ளது. யார் யாருடன் பேசுகிறார்கள்? என்ன செய்கிறார் என்பதை ஒட்டுக் கேட்டு வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்? என்று ஆவேசமாக பேசினார்.
இதற்தற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் உள்ளது. பாஜகவை ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இப்படி பொறுப்பில்லாமல் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட சீமான் போன்றவர்களிடம் பெண்களும், தமிழ் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.