Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே…. 30 நாட்களில் முகம் பளபளப்பாக…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் இயற்கையான முறையில் 30 நாட்களில் முகத்தை எப்படி பளபளக்க செய்வது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
தயிர்- 1 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்

இவற்றை எல்லாம் சேர்த்து கலந்து முகத்தில் பூசி நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். இதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு மாதத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி பளபளப்பாக மாறும்.

பயன்கள்:
முகத்தில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் நீங்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பரு தழும்புகள் மறைய செய்யும். முகப்பரு வராமல் தடுக்கும். முகத்தில் மங்கு உள்ள இடங்களை சரி செய்யும். Pigmentation சரி செய்து முகத்தை சிகப்பழகாக வைத்துக் கொள்ளும். இதனைத் தொடர்ந்து செய்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

Categories

Tech |