Categories
தேசிய செய்திகள்

பெண்களை அவமதித்து ஆபாச வீடியோ… யூடியூப் சேனல் நடத்திய நபர்… அடித்து உதைத்த பெண்கள்…!!!

கேரள மாநிலத்தில் பெண்களை அவமதித்து ஆபாச வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்த நபரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் விஜய் பி நாயர் என்பவர் வசித்துவருகிறார். அவர் வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த சேனலில் பெண்களை ஆபாசமாக பேசியும், கொச்சைப்படுத்தியும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் பற்றியும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதனால் மிகுந்த ஆத்திரமுற்ற பின்னணி குரல் கலைஞருமான பாக்கியலட்சுமி, மகளிர் அமைப்பைச் சார்ந்த தியா சனா மற்றும் சில பெண்கள் கடந்த சனிக்கிழமை அன்று விஜய் பி நாயர் வசித்து வந்த விடுதிக்குச் சென்று அவர் மீது கருப்பு மை ஊற்றியது மட்டும் அல்லாமல் அவரை பயங்கரமாக அடித்து உதைத்தனர்.

அவராலேயே அந்த வீடியோ பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மன்னிப்பு கேட்க வைத்து அதனை யூட்யூபில் அவர்கள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து தான் வசித்து வந்த இருப்பிடத்தில் புகுந்து அடித்து உதைத்து செல்போன், லேப்டாப் ஆகிய பொருள்களை எடுத்துச் சென்றதாக அவர் கொடுத்த புகாரின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே சமயத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய வீடியோ பதிவிட்ட விஜய் பி நாயர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெண்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பினராயி விஜயன் குரல் கொடுத்திருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பெண்களை பிடித்து ஆபாசமான பதிவுகளை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி கேரளா சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே. சைலஜா பேசும்போது, “பெண்களை அவமானப்படுத்தும் சமூக வலைத்தளங்களில் தாக்குதலை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”என்று அவர் கூறியுள்ளார்.பெண்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் எழுப்பும் அரசாங்கம் ஆகியவை கேரளாவின் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன.

 

Categories

Tech |