Categories
தேசிய செய்திகள்

பெண்களை இனி இந்த எண்ணத்தில் தொட்டால்… பலாத்கார வரம்புக்குள் வரும்… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருமணமாகாத 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை பாலியல் ரீதியான எண்ணத்தில் தொட்டால் அது பாலியல் பலாத்கார வரம்புக்குள் வரும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஐபிசி 375 படி பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், தனது தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் ரகுமான் ஆகியோர் ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் அவரை பாலியல் ரீதியான எண்ணத்துடன் உடலின் எந்த பகுதியில் தொட்டாலும் அது பாலியல் பலாத்கார வரம்புக்குள் வரும். எனவே இந்த மேல்முறையீடு செய்து தண்டனையை குறைக்க முடியாது என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.

Categories

Tech |