கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடப்புத்தகங்களில் பெண்களை கொச்சைப்படுத்தும் வாக்கியங்களை நீக்கப் போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்த கனிமொழி, அனைத்து மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது மட்டுமல்லாமல், தமிழகத்திலும் இது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.