கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை நீக்கவும், பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.