Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெண்களை கேலி செய்த வாலிபர்…. கருங்கல்லால் அடித்து “படுகொலை” விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!!

வாலிபரை கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர்  பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சில பெண்களை கேலி செய்துள்ளார். இதனை பார்த்த கேசவன் என்பவர் அலெக்சாண்டரிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அலெக்சாண்டரின் வீட்டிற்கு வந்த கேசவன் அவரை கருங்கல்லை கொண்டு  சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அலெக்சாண்டர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டரின் உறவினர்கள் கேசவனை கைது செய்ய வேண்டும் என கூறி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அலெக்சாண்டரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அலெக்சாண்டரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |