Categories
தேசிய செய்திகள்

பெண்களை நைட் ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தகூடாது…. மாநில அரசு தடாலடி….!!!!

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் தொழிற்சாலையில் இரவில் அவர்களை பணியில் ஈடுபடுத்தகூடாது என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலான பணியில் பெண் தொழிலாளர்களை அவரது எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி ஈடுபடுத்தகூடாது.

அது போன்ற நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய கண்காணிப்பு போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 7 மணியிலிருந்து காலை 6 மணிவரை பணிபுரிய மறுக்கும் பெண்களை பணியில் இருந்து நீக்ககூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணி சூழலில் பாதுகாப்பினை உறுதிசெய்யும் அடிப்படையில் இந்த விதிவிலக்குகளை நடைமுறைபடுத்தும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |