உலகில் பெண்களை விட ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிக அளவு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு பெண்களைவிட ஆண்களுக்கு பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு வைரஸ் தாக்கும் அபாயமும், சிகிச்சையும் தேவைப்படும் என்றும் பாலியல் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணி என்றும் கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள பெண்கள் அனைவரும் இயற்கையாகவே அதிக type 1 interferon proteins உற்பத்தி செய்வது காரணமாக இருக்கலாம் என்றும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ஆண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.