Categories
ஆன்மிகம் இந்து

பெண்கள் இந்த 8 தானங்களை செய்தால் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்..!!

பெண்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில தானங்களை பற்றியும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம்..!

உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மதங்களுமே தானம் அதோட சிறப்பைப் பற்றிப் சொல்லுகிறது. எத்தனையோ விதமான காரணங்கள் இருந்தாலும் பெண்கள் சில குறிப்பிட்ட தானங்களை செய்வதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களுக்கு அப்புறம் அவர்களின் சந்ததியில் வரும் எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்முடைய ஞான நூல்கள் சொல்கின்றன. சரி இப்பொழுது அந்த தானங்களை பற்றி பார்க்கலாம்.

1. மனம் வயிறு குளிரும்படி தண்ணீர் தானம்:

நம் வீட்டிற்கு யார் வந்தாலும் அது நண்பர்களாக இருக்கட்டும் அல்லது எதிரியாக இருக்கட்டும் யார் வந்தாலும் அவர்கள் வந்த உடனேயே அவர்களுக்கு தண்ணீர் அல்லது மோர் குடிக்க கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் என்ன ஆகும் என்றால் அவர்களுடைய வயிறும் மனமும் உடனே குளிர்ச்சியாகும்.

அதனால் ஒருவேளை அவர்கள் கெடுதலான எண்ணத்தில் நம் வீட்டிற்கு வந்து இருந்தாலும் அவர்களுடைய எண்ணத்தை மாற்றும் சக்தி இந்த தண்ணீருக்கும்,மோர்க்கும் உண்டு, அதனால் தான். நம்முடைய முன்னோர்கள் இந்த முறையை பின்பற்றும் படி நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

2. சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், மஞ்சள் தானம்:

ஒருவேளை நம் வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால் அவர்களுக்கு கட்டாயமாக மஞ்சள் மற்றும் குங்குமத்தை கொடுக்க வேண்டும். முன்னாடி சொன்னதுபோல் வீட்டிற்கு வந்த பெண்கள் எதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு நிச்சயம் இதை கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் இந்த குங்குமத்தை சுமங்கலிப்பெண்கள் அவர்களின் நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொழுது அவர்களை அறியாமல் அவர்கள் கடவுளையோ அல்லது வேறு ஏதாவது நல்லது நினைப்பார்கள். அதன் மூலமாக நம் வீட்டிற்கு ஒரு நல்ல அதிர்வு  கிடைக்கும். அதுமட்டுமில்லாமல்  அஷ்ட லட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும்.

3. மஞ்சள், கயிறு தானம்:

பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு சேர்த்து மஞ்சள் கயிறை தானம் செய்யலாம். இந்த தானத்தை நாம் கோவிலில் வைத்து செய்வது ரொம்ப நல்லது. அதேபோல் இந்த தானத்தை நாம் எந்த கிழமைகளில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அதில் எந்தவித தவறும் இல்லை. தானம் செய்வதற்கு மனதுதான் முக்கியமே தவிர, கிழமை எப்பொழுதுமே முக்கியம் இல்லை என்பதை நாம் எப்பொழுதும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு நிறைய வசதிகள் இருந்தால் நீங்களே பெண்களோடு திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கி கொடுக்கலாம். மஞ்சள் கயிறு அல்லது மாங்கல்ய தானம் செய்வதன் மூலமாக பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். அதனால் இந்த தானத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.

4. வஸ்திர தானம்:

பெண்கள் வஸ்திர தானம் செய்யலாம், ஆடை அப்படிங்கிறது மனிதர்களுக்கு ரொம்ப முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அது மிக மிக முக்கியமான ஒன்று. அதனால்தான் ஏழைப் பெண்களுக்கு வஸ்திரதானம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் ஏராளமான நன்மைகள் ஏற்படும். ஏழைப் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இந்த தானத்தை செய்யலாம்.

அதோடு மட்டும் இல்லாமல் நம்மால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் இந்த தானத்தை செய்யலாம். வஸ்திர தானம் செய்யும் பொழுது நம்முடைய பழைய ஆடைகளை தானம் செய்யாமல் புதிய ஆடைகளை தானம் செய்வது தான் நல்லது.

5 . அன்னதானம்:

மிக முக்கியமாக சொல்லப்படும் தானம் அன்னதானம். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று பல நூல்கள் சொல்லியிருக்கிறது. வீட்டிற்கு பசியோடு யார் வந்தாலும் அவர்களுக்கு பெண்கள் நிச்சயம் வயிறார உணவு அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் வயிறும் மனதும் நிறைந்து நம்மை அவர்கள் வாழ வாழ்த்துவார்கள். பெண்கள் அந்த அன்னை ஆதிபராசக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். அதனால்தான் அவர்களிடம் யாராவது பசி என்று கேட்டால் இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு கண்டிப்பாக உணவளிக்க வேண்டும்.

பசி என்று கேட்டவர்களுக்கு உணவளிக்க மறுத்தால் பெண்களுக்கு சாபம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.  நாங்களே ரொம்ப ஏழையாக இருக்கிறோம் எங்களுடைய சாப்பாட்டுக்கே வழியில்லை நாங்கள் எங்கு அன்னதானம் செய்கிறது என்று யாராவது நினைத்தால் கவலைப்படாதீர்கள், நீங்கள் ஒரே ஒரு பிஸ்கடையோ உங்களால் முடிந்த ஏதோ ஒரு சிறிய உணவையோ உங்கள் வீட்டின் அருகே இருக்கும் விலங்குகளுக்கு கொடுங்கள். அதுவும் ஒரு மிகச் சிறந்த தானம் தான்.

6. ஏழை பெண்ணின் சீமந்தத்திற்கு உதவும் தானம்:

ஏழைப் பெண்களின் சீமந்ததிற்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை செய்யுங்கள். அந்த சீமந்தத்திற்கு  ஏதாவது ஒரு செலவை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஒரு நூறு ரூபாய் கொடுத்து கூட அவர்களுக்கு உதவலாம். அதேமாதிரி ஏழைப் பெண்களின் பிரசவத்திற்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை செய்யுங்கள் இதை செய்வதன் மூலமாக உங்களுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கோ புத்திரபாக்கியம் எந்த தடையும் இல்லாமல் ஏற்படும் அதேபோல குழந்தையும் நல்லபடியாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.

7. அரிசி மாவு கோலம் தானம்:

வீட்டில் காலையில் தினமும் போடும் கோலத்தை அரிசி மாவால் போடுங்கள் அதன் மூலமாக அந்த அரிசி மாவை ஈ, எறும்பு போன்ற சின்னச்சின்ன ஜீவராசிகள் உண்டு திருப்தி அடையும். அதனால் அந்த ஆயிரக்கணக்கான ஜீவராசிகளின் உங்களை வாழ்த்தும். நமக்கு ஒரு சேர கிடைக்கும். அதனால் தான் இனிமேல் ஏதாவது சின்ன கோலம் போட்டாலும் அதை அரிசி மாவால் போடுங்கள்.

8. தானிய தானம்:

அதேபோல உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தானியங்களை காக்கை குருவி போன்ற பறவைகளுக்கும் உணவிடுங்கள். அதோட ஒரு சின்ன பாத்திரத்திலும் அவைகளுக்குத் தேவையான தண்ணீரையும் ஊற்றிவையூங்கள், கோடை காலத்தில் எத்தனையோ பறவைகள் நீர் தேடி ஊரெங்கும் சுற்றுகின்றது அதுபோன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் சின்ன பாத்திரத்தில் நீர் இருந்தால் அதை பார்த்துவிட்டு அந்தப் பறவைகள் எப்படி சந்தோஷப்பட்டு அந்த நீரை அருந்தி விட்டு உங்களை வாழ்த்தும் அப்படிங்கிறது நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இப்பொழுது நாம் குறிப்பிட்ட தானங்கள் அனைத்துமே நம் எல்லோராலும் செய்யக் கூடிய மிக மிக எளிமையான தானம்தான். ஆனால் அதோட பலன்கள் என்னமோ மிகமிகப் பெரியது அதனால் உங்களால் முடிந்த வரைக்கும் நாம் குறிப்பிட்டுள்ள அனைத்து தானங்களையும் வாழ்க்கையில் ஒருமுறையாவது செய்து பலன் பெறுங்கள்.

Categories

Tech |