உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுவது சுலபமாகி விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் சுகாதாரமான சமையல் எரிவாயு பெற முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லா கடனும், இலவச சிலிண்டரும் கிடைக்கிறது.
அதன்படி இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கு www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். அதன் பிறகு அதற்கான ஆதாரமாக சில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாருக்கும் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு இருக்க கூடாது.