பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் படத்தை வெளியிட்ட நபர் விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட வேண்டாம். இதனையடுத்து சைபர் கிரைம் போன்ற புகார்களை www. Cyber crime .gov.in. என்ற இணையதளத்திலும், குற்றவாளிகள் மூலம் நிதி இழப்பு ஏற்பட்டவர்கள்1930, 155260 என்ற என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.