Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு… பிரபல நடிகர் மீது புகார்…. பெரும் பரபரப்பு…!!!!

பயில்வான் ரங்கநாதன் மீது பெண்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதி விடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் சினிமா பிரபலங்கள் போன்ற பெண்கள் பலர் குறித்து அவதூறான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு முன் இணையதளத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |