Categories
மாநில செய்திகள்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து திருமாவளவனுக்கு குவியும் கண்டனம் …!!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு கண்டனங்கள்  தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டார். இதேபோல் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக கட்சி உறுப்பினர் காயத்ரி ரகுராம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Categories

Tech |