Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த என்ஜினியர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினியரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடைபயிற்சிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த வாலிபர் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே குதித்து பெண் குளித்துக் கொண்டிருந்த அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். உடனடியாக பொதுமக்கள் விரட்டி சென்று அந்த வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் 8-வது தெருவில் வசிக்கும் பால் ராபின்சன் என்பது தெரியவந்துள்ளது. இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா காலத்தில் திருநெல்வேலிக்கு வந்த ராபின்சன் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இவர் பகல் நேரங்களில் ஒவ்வொரு தெருவாக சென்று கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? நாய்கள் உள்ளதா? என்பதை நோட்டமிட்டுள்ளார்.

அதன் பிறகு அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் பெண்கள் குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து ரசிப்பதற்காக வீடியோ எடுத்ததாக ராபின்சன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால் ராபின்சனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ராபின்சனின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |