உழவர் பவுண்டேஷனின் இந்தாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதன் நிறுவனரான நடிகர் கார்த்தியின் தந்தை கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
தமிழ் திரையுலக நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விருதும் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உழவன் பவுண்டேஷனின் நிறுவனர் நடிகர் கார்த்தி, அவரது அண்ணன், தந்தை மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த விழாவில் வைத்து பேசிய நடிகர் சிவகுமார் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அவர் பேசியதாவது, இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர், நான் பிறந்த போது என் அப்பா 10 மாதத்தில் இறந்துவிட்டார் என்றும், என் அம்மா தன்னை விவசாயம் செய்து தான் காப்பாற்றினார் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கடவுளை நாம் பார்க்கவில்லை என்று கூறிய அவர் பெண்கள் தான் கடவுள் எனவும் நெகிழ்ந்து பேசும் போது கண்ணீர் மழ்கியுள்ளார்.