Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் நகங்களையும், பற்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்…தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்…!!

பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

 

சென்னை ,கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்க வளாகத்தில் தமிழ்நாடு வாணிபர் பேரவை நடத்தவிருக்கும் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். பாலியல் ரீதியான தாக்குதலில் இருந்து தப்பிக்க பெண்கள் நகங்களையும் பற்களையும் ஆயுதங்களாக  பயன்படுத்த வேண்டும் என்றும் , பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம் என்றும் கூறினார் .

Categories

Tech |