ஆப்பிரிக்க தேசமான தஹோமேயில் 1800 களில் அந்த நாட்டை காப்பதற்கு முழுவதும் பெண்களே பங்கு கொண்ட அகோஜி என பெயரிடப்பட்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹாலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் என அதிக பொருட்ச அளவில் சோனியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படைப்புதான் இந்த தி உமன் கிங்.
இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அதிகபட்சமாக பெண்களே பங்கு பெற்றிருக்கின்றனர். வியோலா டேவிஸ், துஸோ மெபெடு லஷனா லைன்ச் உள்ளிட்ட நடிகைகள் முக்கிய இடங்களில் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் நடிகைகள் மட்டுமே நடித்திருக்கின்ற படம் என்ற சிறப்பையும் இது பெறுகிறது. ஜினா பிரின்ஸ் பைத்உட் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் தமிழிலும் திரைக்கு வர இருக்கிறது.