Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

பெண்கள் பாதுகாப்பில்…. அதிமுக அரசுக்கு அக்கறையே இல்லை – கமல் குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா நிதி 190 கோடியில் வெறும் 6 கோடியை மட்டுமே அதிமுக அரசு பயன்படுத்தி உள்ளது. பெண்களின் பாதுகாப்பில் அதிமுக அரசு ஒருபோதும் அக்கறை கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |