Categories
அரசியல்

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த…. இத செஞ்சே ஆகணும்…. மத்திய அரசு திட்டவட்டம்…!!!!

நம் நாட்டில் சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி பல கட்டுப்பாடுகள் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி ராஜ்யசபாவில் முஸ்லிம் பெண்களை குறி வைக்கும் விதமாக செயல்படும் “புல்லி பாய்” போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன ? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “சமூக ஊடகங்களில் தவறு நடக்கும் போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் எதிர்கட்சிகள் கேள்வி கேட்கின்றனர். மேலும் தங்களுடைய கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடகங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதற்காகவே கடுமையான விதிகளை சமூக ஊடகங்களில் அமல்படுத்த வேண்டும். இதற்கு ஒருமித்த கருத்து பாராளுமன்றத்தில் எழுந்தால் கூடுதல் கட்டுப்பாடுகளை சமூக ஊடகங்களுக்கு விதிக்கவும் அரசு தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |