தமிழகத்தில் அம்மா வழியில் பெண்களின் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, பெண்கள் நலத் திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதி அளிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.