Categories
மாநில செய்திகள்

பெண்கள் பாத்ரூமில் ரகசிய கேமரா…. அதிர்ந்து போன அரசு ஊழியர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

வட்டார வளர்ச்சி அலுவலக கழிவறையில் பணியாளர் ஒருவர் ரகசிய கேமரா வைத்த சம்பவம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல் பட்டியை சேர்ந்த சுதாகர் (32) என்பவர் மத்தூர் பி டி ஓ அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வருகின்றார். இவர் அங்குள்ள அலுவலக கழிவறையில் மின்விளக்கு பொருத்தும் ஹோல்டரின் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். அங்கி கேமரா இருப்பதை அறியாத ஊழியர்கள் அந்தக் கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுதாகரின் மொபைல் போன் தவறி கீழே விழுந்துள்ளது. அப்போது அவரின் செல்போனை ஆராய்ந்த போது இது குறித்து தெரிய வந்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரின் மொபைல் போன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய மின்விளக்கு, கேமரா மற்றும் கம்ப்யூட்டரிலிருந்து ஹார்டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |