இலங்கையில் வாழும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்ததற்கு பல தரப்பினரிடையே கண்டனம் எழுந்துள்ளது.
இலங்கை பொது பாதுகாப்பு துறை அமைச்சரான சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் ,மேலும் இஸ்லாமிய பள்ளிகளை மூடவும், அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது பற்றி கூறும்போது, இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் எந்த முஸ்லிம் பெண்களும் புர்கா அணியவில்லை என்றும் இந்த பழக்கமானது அண்மையில் தோன்றியதால் இது நிச்சயமாக தடை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதோடு இலங்கையில் பல இடங்களில் செயல்படும் இஸ்லாமிய மதரஸாக்கள் கட்டாயம் மூடப்படும் என்றும் ,இந்த மதரஸாக்கள் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக காணப்படுவதாக கூறினார் .இலங்கை அரசு சென்ற ஆண்டில் கொரோனநோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைக்காமல் ,அந்த உடலை எரிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தி உள்ளது. இதற்கு ஐநா சபை மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அது கைவிடப்பட்டது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ,பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.