Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு குறி….. நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பண மோசடி…. மத்திய அரசு ஊழியர் கைது….!!!

ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள எம்பிகே நகர் பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்குலின் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 5 மாதங்களாக அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜாக்குலினுக்கு கம்பெனியில் புதிதாக வங்கி கணக்கு துவங்கி கொடுத்து ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜாக்குலின் ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக ஏடிஎம் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்த போது அது ஆக்டிவேட் ஆகாததால் அருகில் நின்றவரிடம் ஜாக்குலின் உதவி கேட்டுள்ளார். அந்த நபரும் ஜாக்லினுக்கு உதவி செய்வது போல் நடித்து தான் வைத்திருந்த ஏடிஎம் கார்டை ஜாக்குலினிடம் கொடுத்தார். அதன் பிறகு ஜாக்குலின் ஏடிஎம் கார்டை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து சென்ற நபர் வங்கி கணக்கில் இருந்த 29,500 ரூபாய் பணத்தை அபேஸ் செய்துள்ளார். இதுகுறித்து ஜாக்குலின் எம்பிகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏடிஎம் சென்டரில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் பிரபு என்பவர் ஏடிஎம் கார்டை மாற்றி பணத்தை திருடியது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், மத்திய அரசுக்கு சொந்தமான ஆவடி கனரக தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அதன் பிறகு பிரபு பல்வேறு ஏடிஎம் சென்டர்களுக்கு சென்று முதியவர்கள் மற்றும் பெண்களை ஏமாற்றி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரபுவிடம் இருந்த 271 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மோசடி தொடர்பாக பிரபுவின் மனைவி மற்றும் மகனிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |