பெண்கள் சிலரின் முகத்தில் தேவையில்லாத முடிகள் வளர்ந்தால், அதனை வீட்டு உபயோகப் பொருட்களை வைத்தே உடனே சரி செய்ய சில வழிகள்.
எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரையை வைத்து தேவையில்லாத இடத்தில் வளரும் முடியை கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் அதனை மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர, முடி உதிர தொடகும்.
ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து, பொடித்துக் எடுக்கவும். அதில் 1 ஸ்பூன், 1 டேபிள்ஸ்பூன் பாசி பயிறு மாவு, சிறிதளவு சந்தன பவுடர் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் ரோஸ்வாட்டர், தேவையான எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் 1/4 மணி நேரம் உலர வைத்து கழுவவும்.
2 டேபிள்ஸ்பூன் ஓட்ஸை மிக்சியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வாழைப்பழம்மற்றும் தேன் கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் பூசி 1/4 மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர முடி வளர்வது தடைபட்டு, சருமம் பொலிவுடன் தோற்றம் அளிக்கும்.
உருளைக்கிழங்கும், கடலைமாவும் முகத்தில் முடி வளர்வதை தடுத்து நிறுத்திவிடும் தன்மை கொண்டவை. கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவைகளை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன், சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி,அதனை முகத்தில் பூசி 1/4 மணி நேரம் உலரவிட்டு முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் 3 முறை செய்து வர முகத்தில் முடி வளர்வது முற்றிலும் நீங்கி விடும்.