Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் வாக்கு எங்களுக்கு தான்…! அதிமுக வெற்றி பிரகாசமாக இருக்கு.. குஷியாக பேசிய அமைச்சர் …!!

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார் .

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடைசி நேரத்தில் வாக்காளர்கள் ஆராய்ந்து,  சீர் நோக்கி யார் முதலமைச்சர் ஆக வேண்டும் ? என எண்ணி வாக்களித்து உள்ளதாகவும், அதிமுக அமோக வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டார்.

பெண்களின் வாக்கு இந்த தேர்தலில் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் , பெண்களின் ஓட்டு அதிமுகவுக்கு எனவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வெற்றி வாய்ப்பு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பிரகாசமாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெண்கள் வாக்கு தான் அதிகமாக விழும்  என்பது கடந்தகால வரலாறு, அந்த வரலாறு மீண்டும் திரும்பி இருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |