Categories
தேசிய செய்திகள்

பெண்கள் வேலைக்கு செல்வது தனிப்பட்ட விருப்பம்…. அவர்களை கட்டாயப்படுத்த கூடாது…. அதிரடி தீர்ப்பு…!!!!

ஒரு பெண் படித்த பட்டதாரி என்பதால், அவரை வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் தான் வாழ வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது என ஜீவனாம்ச வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தனது மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று புனே குடும்ப நீதிமன்றம்  உத்தரவை எதிர்த்து முறையிட்ட நபரை, அவரது மனைவிக்கு ஜீவானம்சம் கொடுக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். மேலும்  பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டார் என்பதற்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. இதனையடுத்து மனைவிக்கு ₹ 5000 மற்றும் 13 வயது குழந்தையின் படிப்பு செலவிற்கு மாதம் ₹ 7000 என கொடுக்க வேண்டும். இவ்வாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |