பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழந்தார். இதனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும், தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைப்பது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அவரின் நற்பெயரை கெடுப்பதற்காக இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.