திருநெல்வேலியில் பெண் கருப்பு பூஞ்சை நோயினால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் 40 வயதாகின்ற பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.
இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சையிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்தப் பெண்ணிற்கு மருத்துவமனையிலேயே தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.